කෂකරම සහ වවල කරමනත අමත යශය 3

   



செய்தி

Prev Next Page:

சேனா என்றழைக்கப்படும் புழுவை கட்டுப்படுத்தல் மற்றும் அந்தப் புழுவால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நஷ்டஈடுகளை பெற்றுக் கொடுத்தல் பற்றிய அறிக்கையை வாராந்தம் எழுத்தில் பிரதமருக்கு சமர்ப்பிக்குமாறு கமத்தொழ…

சேனா என்றழைக்கப்படும் புழுவை கட்டுப்படுத்தல் மற்றும் அந்தப் புழுவால் பயிர்கள் அழிந்த விவசாயிகளுக்கு நஷ்டஈடுகளை பெற்றுக் கொடுத்தல் தொடர்பில் வாராந்தம் பிரதமருக்கு எழுத்தில் அறிக்கையிடுமாறு பிரதமர் அவர்கள் அமைச்சர் பி. ஹரிஷன் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கன்னொறுவ தேசிய விவசாய தகவல்கள் மற்றும் தொடர்பாடல் நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாய உத்த... மேலும் வாசிக்க...

சேனா என்றழைக்கப்படும் புழுவினால் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடுகளை வழங்கல் அம்பாறையில் ஆரம்பம்

சேனா என்றழைக்கப்படும் புழுவினால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நஷ்டஈடுகளை வழங்கும் முதல் கட்டப் பணி அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது என கமத்தொழில், கிராமிய பொருளாதார விவகாரங்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் பி. ஹரிஷன் அவர்கள் கூறினார்கள்.   மேலும் வாசிக்க...

த்ரிப்பிட்டகாபி யாத்திரிகை வாரத்தை முன்னிட்டு கமத்தொழில் அமைச்சில் விஷேட நிகழ்ச்சித் திட்டங்கள்

த்ரிப்பிட்டகாபி யாத்திரிகை வாரத்தை முன்னிட்டு கமத்தொழில் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட நிகழ்ச்சித் திட்டம் 2019.03.22 ஆம் திகதி கமத்தொழில் அமைச்சில் நடைபெற்றது. சமய வழிபாடுகளின் பின்னர், உறுதிமொழி உரைத்து இந்த நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.  விருது பெற்ற கலாநிதி சுமனபால கல்மங்கொட அவர்கள் இந்த நிகழ்ச்சித் திட்டத்தில், அங்குரார்ப... மேலும் வாசிக்க...

பயிர் இழப்பு ஏக்கர்களின் அளவு ஆகஸ்ட் 30 ஆம் திகதியளவில் 59,073. 98 ஏக்கர் வரை அதிகரிக்கும்.

பருவப் பெயர்ச்சி மழைக்கு முன்னர் பெய்யும் வெப்பச்சலன மழை நீரை பயன்படுத்தி பயிர்ச் செய்கை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதில் கவனம் செலுத்தப்படும். மேலும் வாசிக்க...

இலங்கை நிலக் கடலையில் சுய பூர்த்தி

 ஒரு உணவுப் பயிராக பயிரிடப்படுகின்ற நிலக் கடலைப் பயிர் ஏற்கெனவே தேசிய தேவை அளவை விடவும் இரண்டு மடங்கு விளைச்சல் கிடைப்பதாக கமத்தொழில் அமைச்சு குறிப்பிடுகின்றது.  எமது நாட்டில் பயிரிடப்படுகின்ற உணவுப் பயிர்களை ஊக்குவிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பயிர் குழுத் தலைவர்களுடன் கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் கடந்த நாட்களில் நடத்திய கல... மேலும் வாசிக்க...

கெபிலித்த பாதுகாப்பு வன ஒதுக்கத்தில் உள்ள காணிகளை பலவந்தமாக பெற்றுக் கொள்ள முயற்சிக்கும் வியபாரிகளையும் மற்றும் நபர்களையும் கைதுசெய்து அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

  பயிர்ச் செய்வதற்காக என்று கூறிக் கொண்டு கெபிலித்த வன ஒதுக்கத்தில் உள்ள காணிகளை பலவந்தமாக பெற்றுக் கொள்வதற்கு மொனராகல் பிரதேசத்தில் வசிக்கின்ற ஒரு சில நபர்கள் நேற்று (31) ஆம் திகதியும் இன்று (01) ஆம் திகதியும் முயற்சித்து வருவதாக வனப் பாதுகாப்பு அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும் வாசிக்க...

நெல் சந்தைப்படுத்தல் சபை நேற்று (21) 282 மெற்றிக் டொன் நெல்லை கொள்வனவு செய்துள்ளது.

நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்பட்டு நான்காவது நாளாக நேற்று (21) 282 மெற்றிக் டொன் நெல்லை நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்துள்ளது. இதன்படி, 4 நாட்களுக்குள் நெல் சந்தைப்படுத்தல் சபை 1126 மெற்றிக் டொன் நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்ததாக சபையின் தலைவர் நீல் டி அல்விஸ் தெரிவித்தார். நேற்று (21) நெல் அறுவடை மற்றும் கதிரடிக்கப்பட்ட பகுதிகளில்... மேலும் வாசிக்க...

நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லின் நிமித்தம் விவசாயிகளுக்கு செலுத்துவதற்கு என 250 மில்லியன் ரூபா நிதி இன்று (02) விடுவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி முதல் விவசாயிகளிடம் இருந்து நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லை கொள்வனவு செய்யத் தொடங்கியது. மேலும் வாசிக்க...

இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை பாதிக்காத வகையில் சீன உரக் கப்பல் சம்பந்தமான பிரச்சினையை கையாள்வதற்கான செயல்முறை ஒன்றை தயாரிக்கும் பணியை வெளிவிவகார அமைச்சிடம் ஒப்படைக்க தீர்மானம்

சீனாவின் Qingdao Sea win Biotech என்ற கப்பலில் வந்த உரத்தை கொள்வனவு செய்தமை தொடர்பில் குறித்த நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர கணக்காய்வாளர் நாயகம் வழங்கிய விசேட அறிக்கை பற்றி ஊடகவியலாளர்கள் நேற்று (04) கமத்தொழில், வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களிடம் வினவினார்கள். நேற்று (04) காலை எம்பிலிபிட்டிய துங்கம ப... மேலும் வாசிக்க...

எரிபொருள் மோசடியில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து ஊழியர்களையும் கட்டாய விடுமுறையில் அனுப்புவதற்கு அம்பேவெல மில்கோ தொழிற்சாலை தீர்மானித்துள்ளது

மில்கோ நிறுவனத்திற்கு சொந்தமான அம்பேவெல தொழிற்சாலையில் இடம்பெற்ற பாரியளவிலான டீசல் மோசடி பற்றி அதன் தலைவர் ரேணுக பெரேரா இன்று காலை கமத்தொழில், வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களிடம் தெரிவித்தார். மேலும் வாசிக்க...

இலங்கையில் 7,000 எண்ணிக்கைக்கும் அதிகமான காட்டு யானைகள் உள்ளன

இலங்கையில் காட்டு யானைகளின் எண்ணிக்கை தற்போது 7000 எண்ணிக்கையாக அதிகரித்துள்ளது என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க...

அம்பாந்தோட்டை ரிதியகம சஃபாரி பூங்காவின் சிறிய விலங்கு வலயம், விலங்குகள் உற்பத்தி வளர்ப்பு பாதுகாப்பு மற்றும் இடம்பெயரும் பறவைகள் மீட்பு நிலையம் என்பன நாளை (04) திறந்து வைக்கப்படவுள்ளன

அம்பாந்தோட்டை ரிதியாகம சஃபாரி பூங்காவின் இரண்டாம் பகுதிக்கு சொந்தமான சிறிய விலங்கு வலயம், விலங்குகள் பாதுகாப்பு மற்றும் அழிந்துவரும் பறவைகள் மீட்பு நிலையம் என்பவற்றை நாளை அதாவது 10.04.2022 காலை 10.00 மணிக்கு திறந்து வைப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரண்டாவது வலயம் கமநல, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர ... மேலும் வாசிக்க...

தெஹிவளை மிருகக்காட்சிசாலை உட்பட அனைத்து மிருகக்காட்சிசாலைகளும் உலக சிறுவர் தினத்தன்று இவ்வருடம் அதிகளவு ஒரு நாள் வருமானத்தை பதிவு செய்துள்ளன.

உலக சிறுவர் தினமான ஒற்றோபர் மாதம் 01ஆம் திகதியன்று தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை இவ்வருடம் ஒரே நாளில் பெற்ற அதிகூடிய வருமானத்தை பதிவு செய்துள்ளது.  மேலும் வாசிக்க...

நாட்டின் மிளகாய்க்கான தேவையில் 21.2 வீதத்தை பூர்த்தி செய்ய விவசாய நவீனமயமாக்கல் கருத் திட்டம் தயாராக உள்ளது.

நமது நாட்டின் மொத்த மிளகாய்த் தேவையில் 21.2 வீதத்தை கமத்தொழில் அமைச்சின் கீழ் இயங்குகின்ற ஒரு வெளிநாட்டு உதவிக் கருத் திட்டமான விவசாய துறை நவீனமயமாக்கல் கருத் திட்டத்தின் (ASMP- AGRICULTURE SECTOR MODERNIZATION PROJECT) கீழ் ஆரம்பிக்கப்பட்ட மிளகாய் தோட்டங்கள் மூலம் வழங்க முடியும் என அந்த கருத் திட்டம் தெரிவிக்கின்றது. மேலும் வாசிக்க...

கடந்த சில வருடங்களாக இலங்கையில் எந்தவொரு விவசாயியும் நெற்செய்கையை கைவிடவில்லை என விவசாய அபிவிருத்தி திணைக்களம் சுட்டிக் காட்டுகின்றது.

விவசாயிகள் நெற்செய்கையை விட்டு வெளியேறுவதாக குறித்த நபர்களும் மற்றும் தனிநபர் குழுக்களும் வெளியிட்டுள்ள செய்திகள் பற்றிய சரியான தகவல்கள் அடங்கிய அறிக்கையை உடனடியாக வழங்குமாறு விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு கமத்தொழில், வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார். மேலும் வாசிக்க...

மில்கோ நிறுவனம் 2021 ஆம் ஆண்டை விடவும் இந்த ஆண்டு முன்னேற்றம் அடைவதற்கான சாத்தியம் இருக்கின்றது

அரசாங்கத்திற்கு சொந்தமான பால் உற்பத்தி செய்கின்ற ஒரு நிறுவனமான மில்கோ தனியார் நிறுவனத்தை இலாபம் ஈட்டும் ஒரு அரச நிறுவனமாக பரிவர்த்தனை செய்வதற்கான புதிய ஒரு வேலைத் திட்டத்தை விரைவில் ஆரம்பிக்குமாறு கமத்தொழில், வனவிலங்கு மற்றும் வன வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அந்த நிறுவனத்தின் உயர் முகாமைத்துவத்திற்கு திற்கு ஆலோசனை வழங்கினார். மேலும் வாசிக்க...

இந்தப் பயிர் செய்கை போகத்தில் விவசாயத்திற்கு சேதன உரமாக குளங்களின் மண்ணையும் மற்றும் கழிவுகளையும் யாருக்கும் வழங்க இடமளிக்கப்படாதது என கமத்தொழில் அமைச்சர் குறிப்பிடுகிறார்.

2022/23 பெரும்போகத்தில் நெல்லை பயிரிடும் பொருட்டு 70 வீத இரசாயன உரங்களையும் மற்றும் 30 வீத இயற்கை சேதன உரங்களையும் பயன்படுத்த விவசாய திணைக்களம் பரிந்துரை செய்துள்ளது. அதன் கீழ் சிறந்த இயற்கை உரங்களை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிர்ச் செய்கை போகத்தில் குளங்களின் மண்ணையும் மற்றும் கழிவுகளையும் இயற்கை உரங்களாக விற்பன... மேலும் வாசிக்க...

அக்கறையுடைய எந்த ஒரு தரப்புடனும் நாளை (11) நள்ளிரவு 12.00 மணிக்கு யூரியா உர கேள்வி மனு பற்றி விவாதிக்க கமத்தொழில் அமைச்சர் தயார்...

2022/23 பெரும்போகத்தில் நெற்பயிர்ச் செய்கைக்காக உலக வங்கிக் கடன் திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட உத்தேச யூரியா உர கேள்வி மனு தொடர்பாக சில தரப்பினர் தெரிவித்த கருத்துக்கள் ஆதாரமற்றவை என கமத்தொழில் அமைச்சு தெரிய வந்துள்ளது. மேலும் வாசிக்க...

விவசாயத் துறை நவீனமயமாக்கல் கருத் திட்டத்தின் மூலம் இந்த ஆண்டு மேலும் 450 ஏக்கர் காணிகளில் மிளகாயை பயிரிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

கமத்தொழில் அமைச்சின் கீழ் வெளிநாட்டு நிதி உதவியில் இயங்குகின்ற கருத் திட்டமான விவசாயத் துறை நவீனமயமாக்கல் கருத் திட்டம், எதிர்வரும் ஆண்டில் 450 ஏக்கர் அளவான காணிகளில் மேலும் பல மிளகாய் செய்கையை கருத் திட்டங்களை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது. மேலும் வாசிக்க...

இந்த ஆண்டு பெரும்போகத்தில் இயற்கை உரங்கள் என்ற பெயரில் நிறுவனங்கள் கழிவுகளை அனுப்பினால் அந்த நிறுவனங்களுக்கு எந்தவிதத்திலும் தப்பித்துக் கொள்ள முடியாது

2021 பெரும்போகத்தில் சேதன உரங்கள் எனப்படும் கரிம உரங்களை உற்பத்தி செய்யும் சில நிறுவனங்கள் குளத்தின் மண், உமி எரிந்த சாம்பல், டயர்கள் இட்டு எரிக்கப்பட்ட கருப்பு நிற மண் என்பவற்றை விவசாயிகளுக்கு விநியோகித்ததாக தேசிய விவசாயிகள் சங்கம் தெரிவித்தது. மேலும் வாசிக்க...

இந்தப் பெரும்போகப் பயிர்ச் செய்கை காலத்தில் ஒரு ஹெக்டேயர் நெல் வயலுக்கு 176 கிலோ கிராம் வீதம் யூரியா உரத்தை பெற்றுக் கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது

இந்த வருடம் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு 1 ஹெக்டேருக்கு 176 கிலோ கிராம் யூரியா உரத்தை வழங்க விவசாய திணைக்களம் பரிந்துரைத்துள்ளதாக கமத்தொழில், வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். மேலும் வாசிக்க...

கவறா எனும் மாட்டு இனத்தை இலங்கைக்கு இறக்குமதி செய்வது தொடர்பாக வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு எந்த ஒரு தலையீட்டையும் செய்யாது என அந்த அமைச்சு குறிப்பிட்டுக் கூறுகின்றது

இந்தியாவில் இருந்து கவறா என்றழைக்கப்படும் ஒரு பசு மாட்டு இனத்தை இறக்குமதி செய்து இந்த நாட்டிலுள்ள காடுகளில் மேய விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒரு சில ஊடகங்களிலும் மற்றும் சமூக ஊடகங்களிலும் பல கருத்துக்கள் தற்பொழுது வெளியாகி வருகின்றன. மேலும் வாசிக்க...

யானை தாக்கி உயிரிழந்த இரண்டு வனவிலங்கு ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்க முடிவு

யானைகள் சரணாலயத்திலும் பின்னவெல யானைகள் பாதுகாப்பு சரணாலய நிலையத்திலும் யானைகள் தாக்கி உயிரிழந்த இரண்டு வனவிலங்கு அதிகாரிகளுக்கும் நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கமத்தொழில், வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் திருமதி சந்திரா ஹேரத் அவர்களுக்கு நேற்று (08) பணிப்புரை விடுத்துள்ளார். மேலும் வாசிக்க...

அனுராதபுர மாவட்டத்தில் உள்ள யானைகளின் 05 தாழ்வாரப் பகுதிகள் மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது

அனுராதபுர மாவட்டத்தில் யானை மனித மோதல்கள் அதிகரிப்பதற்கு முக்கிய ஒரு காரணமாக அமைந்திருப்பது அந்த மாவட்டத்தில் உள்ள 05 யானை தாழ்வார பகுதிகளில் அனைத்தும் அந்தப் பகுதி மக்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் வாசிக்க...

கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலையால் உர விநியோக நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த சில நாட்களாக நிலவி வருகின்ற மழையுடனான காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் யூரியா மற்றும் MOP உரங்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்திற்கு சொந்தமான இலங்கை உரக் கூட்டுத் தாபனம் மற்றும் வர்த்தக உரக் கூட்டுத் தாபனம் ஆகியவற்றின் தலைவர்கள் கமத்தொழில் அமைச்சுக்கு அறிவித்துள்ளனர். மேலும் வாசிக்க...

USAID நிதி உதவியின் கீழ், 07 மாவட்டங்களில் உள்ள குறைந்த வருமானம் உடைய பண்ணை குடும்பங்களில், ஒரு பண்ணை குடும்பத்திற்கு 42 டொலரை (ரூ. 15,000) மானியம் அடுத்த ஜனவரி மாதம் வழங்கப்படும்

எமது நாட்டின் 07 மாவட்டங்களில் உள்ள குறைந்த வருமானம் பெறும் நெல் விவசாயக் குடும்பங்களுக்கு அவற்றின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக ஒரு குடும்பத்திற்கு 15,000 ரூபா (42 டொலர்) உதவித் தொகையை வழங்க சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் நிலையம் (USAID) தீர்மானித்துள்ளது. மேலும் வாசிக்க...

ஏற்றுமதி விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக இலங்கையில் உள்ள அனைத்து ஏற்றுமதியாளர் அமைப்புகளுக்கும் இந்த செயலமர்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்படுகின்றது

ஏற்றுமதி விவசாய வேலைத்திட்டத்தை மேம்படுத்துவதற்கு தேவையான வசதிகளை வழங்குவது தொடர்பாக கமத்தொழில் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வு 2022 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 29 ஆம் திகதி 2.00 மணிக்கு, கொழும்பு 07 இல் அமைந்துள்ள ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறும். மேலும் வாசிக்க...

2023 ஆம் ஆண்டில் 08 மாவட்டங்களில் தற்போதுள்ள 14,000 ஏக்கர் தரிசு நில வயல் காணிகளை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* பயிரிடும் பொருட்டு உரிமையாளர்களுக்கு 06 மாத கால அவகாசம் வழங்கப்படும்.   2023 ஆம் ஆண்டு, கமத்தொழில் அமைச்சர் திரு. மகிந்த அமரவீர, நாட்டின் 08 மாவட்டங்களில் 14,000 ஏக்கர் தரிசு நில வயல் காணிகளை அரசாங்கத்திற்கு சுவீகரித்து பயிர்ச் செய்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு பணிப்புரை வழங்கினார். இதன்படி, மா... மேலும் வாசிக்க...

2022-12-23 முதல் 2023-01-02 ஆம் திகதி வரை யால தேசிய பூங்கா அதிக வருமானத்தை ஈட்டும்

2022 திசம்பர் மாதம் 23 ஆம் திகதி முதல் சனவரி மாதம் 02 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் யால தேசிய பூங்காவை பார்வையிடுவதற்கு பெருமளவிலான மக்கள் வந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க...

முட்டை உற்பத்திக்கு தேவையான தாய் விலங்குகள் பற்றாக்குறையை குறைக்கும் பொருட்டு குஞ்சு பொரிக்கும் இரண்டு லட்சம் முட்டைகளை (Hatching Eggs) இறக்குமதி செய்ய முடிவு

கால்நடைத் தீவனப் பற்றாக்குறையும் மற்றும் தாய் விலங்குகளின் ஆண்டு இறக்குமதி 80,000 முதல் 40,000 ஆகக் குறைந்திருப்பதும் தற்போது எமது நாட்டில் மாதாந்த முட்டை உற்பத்தி 30 மில்லியனாகக் குறைந்தமைக்கு காரணமாகும். ஒவ்வொரு ஆண்டும் 80,000 தாய் விலங்குகள் இறக்குமதி செய்யப்பட்டாலும், கடந்த ஆண்டில் அதன் அளவு 40,000 ஆகக் குறைந்துள்ளது. இது முட்டையினதும் மற்றும் ... மேலும் வாசிக்க...

புத்தல - கதிர்காமம் வீதியில் காட்டு யானைகளின் தாக்குதல்களைத் தடுக்கவும் காட்டு யானைகளை விரட்டவும் வனஜீவராசிகள் திணைக்களம் நடமாடும் வாகனங்களை ஈடுபடுத்தியுள்ளது

புத்தள - கதிர்காமம் வீதியில் காட்டு யானைகளின் தாக்குதலினால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் பற்றி பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியாகும் செய்திகள் தொடர்பில் கமத்தொழில், வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. மேலும் வாசிக்க...

நாடளாவிய ரீதியில் பல மாவட்டங்களில் நெற் பயிர்களை அண்மித்து பரவி வருகின்ற பல நோய்களைக் கட்டுப்படுத்த உடனடியாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்க அரச…

தற்போது நாட்டில் பல மாவட்டங்களில் நெற் பயிரை அண்மித்து பரவி வருகின்ற மஞ்சள் புள்ளி நோய், பூச்சித் தாக்குதல் மற்றும் வட்டப்புழு நோய் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்த உடனடியாகத் தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கமத்தொழில், வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் திரு.மகிந்த அமரவீர நேற்று (09) விவசாய திணைக்களத்திற்கு பணிப்புரை வழங்க... மேலும் வாசிக்க...

இலங்கையில் விவசாய நடவடிக்கைகளுக்காக சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 6.98 மில்லியன் லீற்றர் டீசல் நாளை (09) முதல் அறுவடைக்காக விவசாயிகளுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

கௌரவ ஜனாதிபதி திரு ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சீன அரசாங்கத்திடம் கோரியபடி, இந்த நாட்டில் விவசாயம் மற்றும் மீன்பிடி ஆகிய தொழிலில்களில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு சீன அரசாங்கம் 10.06 மில்லியன் லீற்றர் டீசலை இலவசமாக வழங்கியது. மேலும் வாசிக்க...

பல மாவட்டங்களில் நெற் பயிர்களை பாதிக்கின்ற நோய்களுக்கான காரணங்களை விவசாய திணைக்களம் வெளிப்படுத்துகின்றது

தற்போது பல மாவட்டங்களில் நெற் பயிர்களை பாதிக்கின்ற நோய்களில் கமத்தொழில் அமைச்சும் விவசாய திணைக்களமும் தமது கவனத்தை செலுத்தியுள்ளன. மேலும் வாசிக்க...

குறைந்த வருமானம் உடைய குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முகமாக 2022 ஆம் ஆண்டில் 18,000 நாட்டுக் கோழிக் குஞ்சுகளை இலங்கை ஹதபிம அதிகார சபை விநியோகித்தது

இந்த நாட்டின் கஷ்டமான பிரதேசங்களில் வாழுகின்ற குறைந்த வருமானம் உடைய குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், எமது நாட்டிலிருந்து அழிந்து வரும் நாட்டுக் கோழிப் பண்ணைகளின் பரிபாலணத்தை வலுப்படுத்துவதற்கும் என ஒரு வேலைத் திட்டம் ஹதபிம அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க...

எதிர்வரும் 2023 சிறுபோகத்திற்கு தேவையான யூரியா உரத்தை கொள்வனவு செய்ய 10 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கப்படும்

எதிர்வரும் 2023 சிறுபோகத்தில் நெற் பயிர் செய்கைக்கும் மற்றும் சோளப் பயிர்ச் செய்கைக்கும் தேவையான யூரியா உரத்தை கொள்வனவு செய்ய 10 ஆயிரம் பில்லியன் ரூபா நிதியை ஒதுக்குமாறு கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் நேற்று (31) அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். தற்பொழுது இலங்கை உரக் கூட்டுத் தாபனம் மற்றும் கொழும்பு வர்த்தக உரக் கூட்டுத் தாபனம... மேலும் வாசிக்க...

இந்த வருடம் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோரின் ஊடாக நெல்லைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது

இந்தப் பெறுபோகத்தில் நெல் கொள்வனவுக்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு பதிலாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோரின் ஊடாக 66,000 மெற்றிக் டொன் நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க...

2025 ஆம் ஆண்டளவில் இலங்கையின் நுகர்வுக்குத் தேவையான மொத்த செத்தல் மிளகாயை உற்பத்தி செய்வதற்கான திட்டம்

2025 ஆம் ஆண்டுக்குள் எமது நாட்டின் நுகர்வுக்குத் தேவையான மொத்த செத்தல் மிளகாயை உற்பத்தி செய்யும் செயற்பாட்டை கமத்தொழில் அமைச்சு ஆரம்பித்துள்ளது. மேலும் வாசிக்க...

உருளைக்கிழங்கை பயிரிடுவதற்கு பயன்படுத்தப்படும் எந்த ஒரு காணியையும் வேறு பயிர்களை பயிரிடுவதற்கு பயன்படுத்தக் கூடாது என கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள்

இலங்கையில் உருளைக்கிழங்கு பயிர்ச் செய்கைக்கு பயன்படுத்தப்படும் காணிகள் விஷேடமான காணிகளாகும். ஆகையால், அந்தக் காணிகளை வேறு பயிர்களை பயிரிடுவதற்கு அல்லது அந்தக் காணிகளில் கட்டிடங்களையும் மற்றும் வேறு நிர்மாணங்களையும் நிர்மாணிப்பதற்கு பயன்படுத்தக் கூடாது என கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள். மேலும் வாசிக்க...

நவீன விவசாய தொழில் நுட்பத்தை வழங்கி இலங்கையின் விவசாயத்தை அபிவிருத்தி செய்ய சீன மக்கள் குடியரசு ஆதரவளிக்கும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் திரு Qi Zhenhong தெரிவித்தார்

இலங்கைக்கான சீனத் தூதுவர் திரு Qi Zhenhong அவர்கள் இன்று (17ஆம் திகதி) காலை அம்பாந்தோட்டை அகுனகொலபெலஸ்ஸ நகரத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டார். கமத்தொழில் அமைச்சர் கௌரவ மகிந்த அமரவீர அவர்களது அழைப்பின் பேரில் அகுனகொலபெலஸ்ஸவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்ட தூதுவர், சீன அரசாங்கம் இலங்கை விவசாயிகளுக்கு வழங்கிய எரிபொருள் மானியத்த... மேலும் வாசிக்க...

இந்த வருடம் பரசூட் முறையில் 13,000 ஏக்கர் காணிகளில் நெற்செய்கையை மேற்கொள்ள 400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் இலவச நாற்றுமேடைத் தட்டுகள் வழங்கும் திட்டத்தை ஆர…

சீனாவில் மிகவும் வெற்றிகரமான நெற்செய்கை முறையான பரசூட் பயிர்ச்செய்கை முறை தற்போது எமது நாட்டில் பயன்படுத்தப்படுகின்ற போதிலும் எமது நாட்டு விவசாயிகளுக்கு அது பற்றிய சரியான அறிவு இன்னும் இல்லை என கமத்தொழில் அமைச்சர் திரு மஹிந்த அமரவீர தெரிவிக்கின்றார். இதன் காரணமாக பரசூட் பயிர்ச்செய்கை முறையை பரவலாக்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு வி... மேலும் வாசிக்க...

விவசாயிகளுக்கு இலவசமாக எரிபொருள் வழங்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்படும்

இலங்கையில் நெற் செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு சீன அரசாங்கம் வழங்கிய 6.98 மில்லியன் லீற்றர் டீசலை உடனடியாக விநியோகிக்குமாறு கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (01) கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். மேலும் வாசிக்க...

முல்லைத்தீவு மாவட்டத்தில் கால்நடைகளுக்கு பரவி வரும் லம்பி தோல் நோய், (Lumpy Skin Disease) வைரஸ் காரணமாக ஏற்படுவதாக கமத்தொழில் அமைச்சின் கால்நடைப் பிரிவு எச்சரிக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த நாட்களில் கால்நடைகளுக்கு பரவி வருகின்ற நோய், லம்பி தோல் நோய் (Lumpy Skin Disease - LSD) என கமத்தொழில் அமைச்சின் கால்நடை அபிவிருத்திப் பிரிவு தெரிவிக்கின்றது. மேலும் வாசிக்க...

பல தசாப்தங்களாக புனரமைக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ள 30 குளங்களை இந்த ஆண்டு புனரமைக்க 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

பல தசாப்தங்களாக புனரமைக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ள 30 குளங்களை புனரமைக்க இந்த வருடத்தில் கமநல அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் வாசிக்க...

சமூக வலையமைப்பு

     கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்