කෂකරම සහ වවල කරමනත අමත යශය 3

   



இலங்கை நிலக் கடலையில் சுய பூர்த்தி

 ஒரு உணவுப் பயிராக பயிரிடப்படுகின்ற நிலக் கடலைப் பயிர் ஏற்கெனவே தேசிய தேவை அளவை விடவும் இரண்டு மடங்கு விளைச்சல் கிடைப்பதாக கமத்தொழில் அமைச்சு குறிப்பிடுகின்றது.

 எமது நாட்டில் பயிரிடப்படுகின்ற உணவுப் பயிர்களை ஊக்குவிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பயிர் குழுத் தலைவர்களுடன் கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் கடந்த நாட்களில் நடத்திய கலந்துரையாடலின் போது இலங்கையில் நிலக் கடலைப் பயிர்ச் செய்கை பற்றிய விபரங்களை கேட்டறிந்தார்கள்.

 எமது நாட்டின் வருடாந்த தேவை 30,000 டெ.டொ. களாகும். எனினும் 2021 ஆம் ஆண்டு இறுதியளவில் நிலக் கடலைப் பயிர்ச் செய்கையிலிருந்து கிடைத்த விளைச்சலின் அளவு 64,000 மெ.டொ. இற்கு அதிகமாகும் என நிலக் கடலைப் பயிர்ச் செய்கை பற்றிய பயிர் குழுத் தலைவர் பிரதிப் பணிப்பாளர் திரு எஸ். என். பி. வீரகோன் அவர்கள் தெரிவித்தார்கள்.

 விவசாயத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய நிலக் கடலை இனமாகிய லங்கா ஜம்போ என்ற நிலக் கடலை இனம் காரணமாக ஜம்போ பீனெட்டு உற்பத்திற்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தொகைகளையும் இடைநிறுத்த இதனால் முடிந்துள்ளது. இன்று ஜம்போ பீனெட்டை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுவது, இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்ற இனம் என்பதால் இது வரை வெளிநாடுகளுக்கு சென்ற அந்நியசெலாவணியை சேமிக்க முடிந்துள்ளது.

 நிலக் கடலையை மேலதிக விளைச்சலாக பயன்படுத்துவதன் மூலம் அதன் மைய உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கு ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் விவசாயத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார். குறிப்பாக உடலுக்கு உகந்த நிலக் கடலை எண்ணெய் மற்றும் பட்டர் நெய் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிப்பதாகவும், மேலும் நிலக் கடலைப் பயிர் செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் அவர்கள் கூறினார்கள்.

 இரசாயன உரங்களை அல்லது கிருமநாசினிகளை பாவிக்காமல் பயிரிடக் கூடிய ஒரு பயிராகிய நிலக் கடலையையும் மற்றும் அது போன்ற மேலும் பயிர் இனங்களையும் பயிர்ச் செய்வதில் கவனம் செலுத்தப்படும் எனவும், விவசாயிகளை அதற்காக ஊக்குவிக்க வேண்டும் எனவும் கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் தெரிவித்தார்கள்.

சமூக வலையமைப்பு

     கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்