කෂකරම සහ වවල කරමනත අමත යශය 3

   



கெபிலித்த பாதுகாப்பு வன ஒதுக்கத்தில் உள்ள காணிகளை பலவந்தமாக பெற்றுக் கொள்ள முயற்சிக்கும் வியபாரிகளையும் மற்றும் நபர்களையும் கைதுசெய்து அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

  பயிர்ச் செய்வதற்காக என்று கூறிக் கொண்டு கெபிலித்த வன ஒதுக்கத்தில் உள்ள காணிகளை பலவந்தமாக பெற்றுக் கொள்வதற்கு மொனராகல் பிரதேசத்தில் வசிக்கின்ற ஒரு சில நபர்கள் நேற்று (31) ஆம் திகதியும் இன்று (01) ஆம் திகதியும் முயற்சித்து வருவதாக வனப் பாதுகாப்பு அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளது.

   இன்று (01) முற்பகல் கமத்தொழில், வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களின் தலைமையில் இது பற்றிய ஒரு கலந்துரையாடல் பத்தரமுல்லவில் அமைந்துள்ள வனப் பாதுகாப்புத் திணைக்கள அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போது, அமைச்சர் அவர்கள் கெபிலித்த வன ஒதுக்கத்தில் உள்ள காணிகளை பெற்றுக் கொள்வது சம்பந்தமான விடயங்கள் பற்றி கேட்டறிந்தார்கள். பயிர்ச் செய்கைக்கு என கெபிலித்த வன ஒதுக்கத்திற்கு வெளியால் 25,000 ஏக்கர் அளவான காணிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. எனினும் அந்த நபர்கள் அந்தக் காணிகளில் பயிர்ச் செய்யாமல் வன ஒதுக்கப் பிரதேசத்தில் உள்ள காணிகளை பெற்றுக் கொள்வதற்கு முயற்சிப்பதாக உரிய அதிகாரிகள் சுட்டிக் காட்டினார்கள்.

  இன்று (01) ஆம் திகதி முற்பகல் வன சீவராசி பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சிலர் விஷேட அதிரடிப் படையுடன் இணைந்து கெபிலித்த வன ஒதுக்கப் பிரதேசத்தினுள் நுழைந்த போது ஒரு சிலர் அவர்களுக்கு இடையூறு விளைவித்ததாக பதிவாகிய காரணத்தினால் அமைச்சர் அவர்கள் மொனராகல் பிரதி பொலிஸ் மாஅதிபருடன் தொலைபேசியில் கதைத்து அங்கு நிலவுகின்ற நிலைமை பற்றி வினவினார்கள்.

  அதற்கமைவாக, பயிரிடும் பொருட்டு முன்னுரிமை அளிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், அதற்கு பொருத்தமான உகந்த காணிகள் இருக்கின்ற போதிலும், வன ஒதுக்கத்திலுள்ள காணிகளை பலவந்தமாக பெற்றுக் கொள்ள எவரேனும் ஆட்கள் முயற்சித்தால் அத்தகையவர்களை உடனடியாக கைதுசெய்து சட்டநடவடிக்கையை எடுக்குமாறு அமைச்சர் அவர்கள் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தினார்கள்.

  அதே போல் பெரும்போகத்தில், சோளம் அடங்கலாக பயிர்ச் செய்கை ஆரம்பிக்க இருப்பது ஒற்றோபர் மாதத்திலிருந்து என்பதால், அதற்கு முன்னர், பயிர்ச் செய்கை நிமித்தம் தேவையான காணிகள் இல்லாத நபர்களை இனங்காணுவதற்கு சகல தரப்புகளினதும் பங்குபற்றலில் ஒரு கூட்டத்தை நடத்தி நடவடிக்கையை எடுக்கும் வரை, கெபிலித்த வன ஒதுக்கத்தில் உள்ள காணிகளை எந்த ஒரு நபரோ அல்லது வியாபாரத் தரப்போ பெற்றுக் கொள்வதற்கு இடமளிக்கக் கூடாது என அமைச்சர் அவர்கள் கூறினார்கள். 

  இந்தக் கலந்துரையாடலில், வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திருமதி சந்திரா ஹேரத் அவர்களும் மற்றும் வன வளங்கள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அவர்களும் கலந்து கொண்டார்கள்.  

சமூக வலையமைப்பு

     கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்