කෂකරම සහ වවල කරමනත අමත යශය 3

   



பல தசாப்தங்களாக புனரமைக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ள 30 குளங்களை இந்த ஆண்டு புனரமைக்க 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

பல தசாப்தங்களாக புனரமைக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ள 30 குளங்களை புனரமைக்க இந்த வருடத்தில் கமநல அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எமது நாட்டில் பல மாவட்டங்களில் கைவிடப்பட்டுள்ள நீர்த்தேக்கங்கள் அதிகம் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்த முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு, கைவிடப்பட்டுள்ள அத்தகைய நீர்த்தேக்கங்கள் எத்தனை உள்ளன என்பது பற்றிய ஒரு கணக்கெடுப்பை ஆரம்பிக்குமாறு கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர, கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்தார். நம் நாடு கொடுத்தது.

தற்போதைய கணக்கெடுப்புகளின்படி, பல மாவட்டங்களில் கைவிடப்பட்டுள்ள குளங்கள் தொடர்பில் அடையாள வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. குளங்களின் கீழ் 20 ஏக்கருக்கும் அதிகமான விவசாய வயல் காணிகளை உள்ளடக்கும் கைவிடப்பட்டுள்ள குளங்களை மாத்திரம் புனரமைத்து மீண்டும் விவசாயத்திற்கு பயன்படுத்த கமத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, அம்பாந்தோட்டை, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, அனுராதபுரம், குருநாகல், புத்தளம், பதுளை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கைவிடப்பட்டுள்ள 30 குளங்களை இந்த வருடம் மீள அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த குளங்களின் கீழ் நெல்லை பயிரிடுவதற்கு பதிலாக காய்கறிகளையும் மற்றும் பழங்களையும் முன்னுரிமை அளித்து, எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் இந்த குளங்களின் புனரமைப்பு பணிகளை நிறைவு செய்வதில் கவனம் செலுத்துமாறு கமத்தொழில் அமைச்சர் கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு அறிவுறுத்தினார்.

சமூக வலையமைப்பு

     கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்