කෂකරම සහ වවල කරමනත අමත යශය 3

   



மில்கோ நிறுவனம் 2021 ஆம் ஆண்டை விடவும் இந்த ஆண்டு முன்னேற்றம் அடைவதற்கான சாத்தியம் இருக்கின்றது

அரசாங்கத்திற்கு சொந்தமான பால் உற்பத்தி செய்கின்ற ஒரு நிறுவனமான மில்கோ தனியார் நிறுவனத்தை இலாபம் ஈட்டும் ஒரு அரச நிறுவனமாக பரிவர்த்தனை செய்வதற்கான புதிய ஒரு வேலைத் திட்டத்தை விரைவில் ஆரம்பிக்குமாறு கமத்தொழில், வனவிலங்கு மற்றும் வன வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அந்த நிறுவனத்தின் உயர் முகாமைத்துவத்திற்கு திற்கு ஆலோசனை வழங்கினார்.

மில்கோ தனியார் நிறுவனத்தின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான நிகழ்ச்சி நிரலை தயாரிப்பது தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இது பற்றி குறிப்பிட்டார்.

குறிப்பாக இந்த நிறுவனம் இந்த ஆண்டு ஈட்டிய வருமானம் பற்றி அமைச்சர் உயர் முகாமைத்துவத்திடம் வினவினார்.

2021 ஆம் ஆண்டில் பால் மைய உற்பத்திகளை விற்பனை செய்ததன் மூலம் மில்கோ நிறுவனத்திற்கு 8,052 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்தது. ஆனால் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை, ஏதாவது ஒரு நாட்டில் சில பொருளாதார பின்னடைவு ஏற்பட்டாலும், கடந்த ஆண்டின் சில மாதங்களுடன் ஒப்பிடும்போது 2022 ஆம் ஆண்டின்  சில மாதங்களில் நிறுவனத்தால் அதிக வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளது.

இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்திற்குள் மில்கோ நிறுவனத்தால் 7774 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளது. இந்த வருட இறுதிக்குள் குறைந்தபட்சம் 8,500 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்ட முடியும் என நிறுவனத்தின் உயர் முகாமைத்துவம் அமைச்சரிடம் தெரிவித்தது. இந்த வருடம் யூலை மாதத்திற்கு பின்னர் ஒவ்வொரு மாதமும் 20-30 மில்லியன் ரூபா அளவில் இலாபம் ஈட்டப்பட்டமை விஷேடத்துவமாகும்.

இந்த ஆண்டு மில்கோ நிறுவனம் தயாரித்த பல பால் மற்றும் பால் மைய பொருட்கள், அதாவது குறிப்பாக, 2,945,329 லீற்றர் திரவ பாலும், 4,875,602 லீற்றர் யோர்க்கெட்டும், 889,216 லீற்றர் கொழுப்பு நீக்கப்பட்ட பாலும், 3,546,409 லீற்றர் ஐஸ்கிரீமும் மற்றும் 36,906 கிலோ கிராம் நெய்யும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

மேலும் 12,648 கிலோ சீஸ், 173,897 கிலோ வெண்ணெய், 1,290,622 கிலோ பால் மாவு என்பனவும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

தற்பொழுது இலங்கையில் பால் மாடு வளர்ப்புக்கான தாய் விலங்குகள் பற்றாக்குறையால் இந்திய அரசாங்கத்திடம் இருந்து பால் மாடுகள் கிடைப்பதில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுடன் கலந்துரையாடியதாகவும், அது வெற்றியளிக்கும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து பால் மாடுகளை பெற்றுக்கொள்வது சம்பந்தமாக இந்த நாட்டிலுள்ள பாகிஸ்தான் தூதுவருடன் கலந்துரையாட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எமது நாட்டின் காலநிலைக்கு ஈடுகொடுக்கக் கூடிய பால் மாடுகளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து பெற வேண்டியிருந்தாலும், தற்போது அந்த இரு நாடுகளும் பால் மாடுகளை ஏற்றுமதி செய்வதை நிறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஆனால் இந்திய உயர்ஸ்தானிகர் இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி பால் மாடுகளை இலங்கைக்கு பெற்றுக் கொள்ளும் வகையில் தேவையான உதவியை வழங்க சம்மதித்துள்ளார்.

சமூக வலையமைப்பு

     கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்