மரங்களை வெட்டி வீழ்த்தல் (கட்டளைச்) சட்டத்தின் கீழான ஒழுங்குகளை அமுல்படுத்துதல்
- பலா, ஈரப்பலா, பெண்பனை மரங்களின் விளைவு விதைகள் மனிதரின் நாளாந்த உணவாகப் பயன்படுத்தப்படுவதால் அவைகளை வெட்டி விழுத்துவதற்கு அனுமதி பெறப்பட வேண்டும்.
- மேலே குறிப்பிடப்பட்ட 03 வரைக்குமான மரங்களை வெட்டி விழுத்துவதற்கான அனுமதியை வழங்குவதற்கு பிரதேச செயலாளர் அனுமதிப்பத்திரம் வழங்க அதிகாரம் கொண்டுள்ளார்.
- மாவட்ட செயலாளர் அவ்வகையான 3-15 மரங்களை வீழ்த்துவதற்கு அனுமதிப்பத்திரத்தை வழங்க முடியும்.
- இவ்வண்ணமான மரங்கள் 15 க்கும் அதிகமாக இருப்பின் பிரதேச விவசாயக்குழு மற்றும் மாவட்ட செயலகம் என்பவற்றின் சிபார்சின் பேரில் விவசாய அமைச்சின் செயலாளரால் அனுமதிப்பத்திரம் வழங்க முடியும்.
பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய அசெகரியங்களைத் தடுக்கும் பொருட்டு, சொல்லப்பட்ட சட்டம் மற்றும் கட்டளையினை, மரங்களை வெட்டி வீழ்த்தல் (கட்டுப்பாட்டு) சட்டம் மற்றும் சொல்லப்பட்ட (கட்டளையின்) கீழான இலக்குகளை அடைந்துகொள்வதற்காக பின்வரும் நிர்வாக ஏற்பாடுகளை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- மரங்களை வெட்டி வீழ்த்துதல் (கட்டுப்படுத்தும்) சட்டத்தினால் கட்டுப்படுத்தப்படும் மரங்களை வெட்டுதல், வீழ்த்துதல், மட்டம் வெட்டுதல், அழித்தல் என்பவற்றுக்காக அனுமதிபத்திரம் வழங்கப்படும் சந்தர்ப்பங்களில் அதனை உறுதிப்படுத்துவதற்காக பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள் கீழே தரப்படுகின்றன.
- உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் அபாயகரமான மரங்கள்.
சுற்றாடல் உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர், விவசாய ஆய்வு மற்றும் உற்பத்தி உதவியாளரை உள்ளடக்கிய குழு ஊடாக அறிக்கை பெறப்படுகிறது.
- ஒரு நீதிமன்றக் கட்டளையால் தேவைப்படுத்தப்பட்ட மரங்களை வீழ்த்துதல்.
- நீதிமன்றக் கட்டளையின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
- இணக்கசபையின் தீர்ப்பு பொருத்தமானதல்ல.
- அரசாங்க அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தில் தடையேற்படுத்தும் மரங்கள்
- அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் தொடர்புடைய கருத்திட்ட அறிக்கை.
- சுற்றாடல் அதிகாரி, கிராம அதிகாரி, விவசாய ஆய்வு மற்றும் உற்பத்தி உதவியாளரை உள்ளடக்கிய ஒரு குழுவினால் வழங்கப்பட்ட ஒரு அறிக்கை
- உரிய அதிகாரசபையால் அங்கீகரிக்கப்பட்ட நிர்மாண வேலை ஒன்றுக்கு எதிராக தரைத்தோற்றம் மற்றும் அளவுகளில் குறுக்கிடும் முறையில் நிற்கும் மரங்கள்
- உரிய அதிகாரசபையால் அங்கீகரிக்கப்பட்ட நிர்மாணத் திட்டம்
- சுற்றாடல் அதிகாரி, கிராம உத்தியோகத்தர், விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளரை உள்ளடக்கிய ஒரு குழுவினால் வழங்கப்பட்ட ஒரு அறிக்கை.
- வேர் பிடுங்கப்பட்ட அல்லது இயற்கை சூழமைவுகளின் கீழ் பட்டுப் போன மரங்கள்
- சுற்றாடல் அதிகாரி, கிராம உத்தியோகத்தர், விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளரை உள்ளடக்கிய ஒரு குழுவினால் வழங்கப்பட்ட ஒரு அறிக்கை.
- வயது முதிர்ந்தமையால் அல்லது நோய்களினால் கனிகள் கொடுக்காத மரங்கள்.
- சுற்றாடல் அதிகாரி, கிராம உத்தியோகத்தர், விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளரை உள்ளடக்கிய ஒரு குழுவினால் வழங்கப்பட்ட ஒரு அறிக்கை
- காணிச் சொந்தக்காரரோ அல்லது அவருடைய /அவளுடைய பிள்ளைக்காகவோ, வதிவிட நோக்கத்திற்காக கட்டுவதற்கு வேண்டிய மரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான மரங்கள் உரிய அதிகாரசபையால் அங்கீகரிக்கப்பட்ட நிர்மாணத் திட்டத்திற்கு ஏற்றபடியாக.
- உரிய அதிகாரசபையால் நிர்மாணிக்கப்பட்ட நிர்மாணத்திட்டம்.
- மேலதிக 02 பலாமரங்களை ஆகக் குறைந்தது கொண்டிருத்தல் – வெட்ட எதிர்பார்க்கப்படும் மரங்களுக்கு மேலதிகமாக கனிதரும் மரங்கள் அல்லது நெஞ்சு மட்டத்தில் 25 cm க்கு மிஞ்சிய சுற்றுவட்டத்தைக் கொண்ட மரங்கள்.
- சுற்றாடல் அதிகாரி, கிராம உத்தியோகத்தர், விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளரை உள்ளடக்கிய ஒரு குழுவிலிருந்து பெறப்பட்ட ஒரு அறிக்கை
- காணிச் சொந்தக்காரரின் குடும்ப உறுப்பினர் அல்லது அவளது /அவரது குடும்பத்தினரின் கடுமையான நோயின்பொழுதான சிகிச்சை செலவினங்களை பூர்த்தி செய்வதற்கு அல்லது இதையொத்த இக்கட்டான நிலைமைகளில் தேவையான பணத்தை பெற்றுக்கொள்வதற்கு தேவைப்படும் மரங்கள். (உயர்ந்த பட்சம் 03 மரங்கள்)
- இக்கட்டான நிலைமையை உறுதிப்படுத்தும் ஆவணங்களின் பிரதிகள்.
- வெட்டுவதற்கு எதிர்பார்க்கப்படும் மரங்களுக்கு மேலதிகமாக ஆகக் குறைந்த 03 அதிகமான பலாமரங்கள், வளர்ந்த கனிகள் காய்க்கும் நெஞ்சுமட்டத்தில் 02 cm அதிகமான அளவுடையவை..
- சுற்றாடல் அதிகாரி, கிராம உத்தியோகத்தர் விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளரை உள்ளடக்கிய ஒரு குழுவிலிருந்து பெறப்பட்ட ஒரு அறிக்கை.
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வெள்ளிக்கிழமை, 12 அக்டோபர் 2012 16:40