English (UK)SinhalaSriLankaTamilIndia


சேதனப் பசளைப் பிரிவினால் வழங்கப்பட வேண்டிய சேவைகள்

1. சேதனப் பசளை உற்பத்தியும் அதன் பாவனையும் பற்றிய நிகழ்ச்சித்திட்டங்களை ஒருங்கிணைத்தல்

திட்டங்கள் நாட்டில் சேதனப் பசளை நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னோடிப் பயிற்சி நிலையமாக விளங்குகின்ற மாகந்துர பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தில் இலவசமாக நடாத்தப்படுகின்றன. சேதனப் பசளை உற்பத்தியில் அக்கறையுடைய எந்தவொரு நபருக்கும் இந்தப் பயிற்சி நிகழ்ச்சித் திட்டத்தில் பங்குபற்றலாம். விவசாயிகள், உற்பத்தியாளர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அரச ஊழியர்கள் அல்லது ச.அ.சா.நி ஊழியர்கள் ஆகியோரின் நன்மை கருதி எந்தவொரு நிறுவனமும் அல்லது எந்தவொரு அமைப்பும் கேட்டுக்கொள்ளும் சந்தர்ப்பங்களில் இந்தப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் இந்த நிலையத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டு நடாத்தப்படும். கோட்பாட்டு, செயன்முறை ரீதியான பயிற்சி என்பவற்றை உள்ளடக்குகின்ற சேதனப் பசளை உற்பத்தி மற்றும் அதன் பயன்பாடு ஆகிய சகல அம்சங்களும் ஒரு நாள் பயிற்சியில் உள்ளடக்கப்பட்டு நடாத்தப்படும். தேநீர், மதிய உணவு அதே நேரம் துண்டுப்பிரசுரங்கள் முதலியன பங்குபற்றுநர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். குறித்த இந்தப் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் தவிர, பின்வரும் சேவைகளும் வழங்கப்படுகின்றன.

I. சேதனப் பசளை உற்பத்தியாளர்களுக்குத் தேவையான அறிவுரைகள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஆலோசனைகள்.

II. இந்தப் பசளையில் காணப்படும் இரசாயக் கலவை, மண், நீர், தாவரங்களின் பாகங்கள் என்பவற்றின் பகுப்பாய்வு.

விசாரணைகள்

பிரதிப் பணிப்பாளர் (ஆராய்ச்சி)
பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம்
மாகந்துர, கோனவில. (வடமேல்)

தொலைபேசி இலக்கங்கள் :   031 – 2299625
:   031 – 2299805
தொலைநகல் :   031 – 2299707

 

2. சேதனப் பசளை உற்பத்தியாளர்கள் பதிவு

தரமான சேதனப் பசளை தயாரிப்பதை ஊக்குவிக்கும் நிமித்தம் நாடளாவிய ரீதியில் சேதனப் பசளை உற்பத்தியாளர்களைப் பதிவுசெய்வதற்காக கமத்தொழில் அமைச்சின் சேதனப் பசளைப் பிரிவு நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதற்கிணங்க, அதிகளவான பயனைப் பெறும் வகையிலும் வினைத்திறன் வாய்ந்த இரசாயனப் பசளையை அதிகரிக்கும் வகையிலும் சேதனப் பசளை உற்பத்தியை அதிகரிப்பதற்கும் சேதனப் பசளையின் பாவனையை ஊக்குவிப்பதற்கும் எதிர்பார்க்கப் படுகின்றது.

3. சேதனப் பசளைப் பிரிவுக்கு உற்பத்தியாளர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பகுப்பாய்வு அறிக்கையின் பேரில், அந்த உற்பத்தியாளர்களின் உற்பத்தியை மேம்படுத்தும் நிமித்தம் தேவையான அறிவுரைகள் வழங்கப்படும்.

4. வாத்தக அடிப்படையில் இந்த சேதனப் பசளையை உற்பத்தி செய்ய விரும்புகின்ற உற்பத்தியாளர்களுக்கு தொழில்நுட்ப அறிவுரைகள் வழங்கப்படும்.

5. ஒவ்வொரு தரப்பினதும் நன்மை கருதி சேதனப் பசளை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், பாவனையாளர்கள் ஆகியோருக்கு இடையிலான ஒருங்கிணைப்பு விடயங்களை மேற்கொள்ளுதல்.


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: புதன்கிழமை, 10 அக்டோபர் 2012 04:23

சமூக வலையமைப்பு

பார்வையாளர்கள் எண்ணிக்கை

Please install plugin HitCounter!

கமத்தொழில் அமைச்சு

"கமத்தொழில் மந்திரய",

80/5, இரஜமல்வத்த அவென்யு,

பத்தரமுள்ள, ஸ்ரீலங்கா

தொ/பே: +94-11-2869553

தொலைநகல்: +94-11-2868910

மின்-அஞ்சல்: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பதிப்புரிமை © 2012 கமத்தொழில் அமைச்சு

அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை .

 தீர்வு மூலம்