சேனா என்றழைக்கப்படும் புழுவினால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நஷ்டஈடுகளை வழங்கும் முதல் கட்டப் பணி அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது என கமத்தொழில், கிராமிய பொருளாதார விவகாரங்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் பி. ஹரிஷன் அவர்கள் கூறினார்கள்.
‘இந்தப் புழுவினால் முழுயாக பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள 307 விவசாயிகளுக்கு இங்கு நஷ்டஈடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒரு ஏக்கருக்கு அரசாங்கத்தினால் 40,000 ரூபாவை வழங்குவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ‘இதன் நிமித்தம் அரசாங்கம் 16 மில்லியன் ரூபா நிதியை செலவிடும். விவசாயக் காப்புறுதி சபை மற்றும் விவசாயத் திணைக்களம், கமநல அபிவிருத்தித் திணைக்களம், அம்பாறை மாவட்ட செயலகம் முதலியவற்றின் அலுவலர்களினால் அந்த அழிவுகள் தொடர்பான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த விவசாயிகளுக்கு அம்பாறை மாவட்ட செயலகத்தின் கேட்போர்கூடத்தில் மார்ச் மாதம் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு நஷ்டஈடுகள் வழங்கப்படும். அம்பாறை மாவட்டத்தின் மகஒயா, பதியதலாவ, அக்கரைப்பற்று, எரகம, கல்முனை, நாமல்தலாவ, பொத்துவில், மடாதகம, மத்திய முகாம் ஆகிய கமநல சேவைப் பிரிவுகளில், சேனா புழுவினால் முழுமையாக பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நஷ்டஈடுகள் வழங்கப்படும்’.
‘முதல் கட்டமாக அம்பாறை, அனுராதபுரம், மொனராகல் ஆகிய மாவட்டங்களில் இந்த நஷ்டஈடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் நிமித்தம் அமைச்சு 250 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளது’.
எனவும் அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.