கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் யாழ்பாணத்திற்கு செய்த விஜயமானது நான்கு தசாப்தங்களின் பின்னர் வட பகுதி விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கண்டறியும் நிமித்தம் கமத்தொழில் அமைச்சர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு விஜயமாக வரலாற்றில் பதிவாகியது.
விவசாயிகளின் கஷ்ட துன்பங்களை உணர்ந்த, தமிழ் மொழியை பேசக் கூடியஅமைச்சர் ஒருவர் அந்த பகுதி மக்களின் குறைகளை கேட்டறியும் நிமித்தம் விஜயம் செய்ததற்காக வட பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
யாழ் மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தின் கமக்காரர் அமைப்புகளை சந்தித்த அமைச்சர் அங்குள்ள விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் தேவைகளையும் கேட்டறிந்து,அந்த இடத்திலேயே அவற்றுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்தார். கமத்தொழில் அமைச்சுடன் இணைந்த சகல நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை இந்த நிகழ்வில் கலந்து கொள்ளச் செய்த அமைச்சர், விவசாயிகளின் பிரச்சினைகளை நேரடியாக குறிப்பிடுவதற்கான ஒரு வாய்ப்பையும் அவர்களுக்கு வழங்கினார்.
முப்பது வருடம் நீடித்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு விதவைகளாகிய பெண்களுக்கும் மற்றும் அங்கவீனம் அடைந்தவர்களுக்கும் கமத்தொழில் அமைச்சினால் பல நன்மைகளை பெற்றுக் கொடுக்கும் “சிதமு”கமக்கார் அமைப்புகளின் ஊடாக அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்த நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.
வடக்கையும் தெற்கையும் இணைத்து கமத்தொழில் அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்ட இந்த விஜயத்தை வட பகுதியிலுள்ள மக்கள் பெரிதும் பாராட்டினார்கள்.
இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்த, இராஜாங்க அமைச்சர்களான டீ.பீ. ஹேரத், மொஹான் த சில்வா, சசிந்திர ராஜபக்ஷ மற்றும் சுரேஷ் ராகவம் ஆகியோரும், வட மாகாண ஆளுநரும் மற்றும் கமத்தொழில் அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களின் சகல உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.