කෂකරම සහ වවල කරමනත අමත යශය 3

   



03 ஆண்டுகளுக்குள் கரிம உரங்களின்பாவனையை1% முதல் 30% வீதமாக அதிகரிக்க, நாட்டின் சார்பாக கமத்தொழில் அமைச்சு எடுத்த சிறந்த முடிவு

AGRI NEWS 01

இரசாயன பசளைகளின் தகாத பாவனையினால் உள்ளூர் விவசாயிகளும் நுகர்வோரும் கடுமையான சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகவும், ஒரு நிலையான தீர்வாக, கரிம உரங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும்விவசாயிகளுக்கு மத்தியில் அத்தகைய உரங்களை பிரபலப்படுத்துவதற்கும் அவசியமான ஒரு திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என கமத்தொழில் அமைச்சர் கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே அவர்கள் கூறினார்கள். இரசாயன உரங்களின் தகாத  பாவனையால் ஏற்படும் சுற்றாடல் பிரச்சினைகளுக்கும் மற்றும் சுகாதார பிரச்சினைகளுக்கும் ஒரு நிலையான தீர்வை வழங்கும் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் கனவை  நனவாக்கக் கூடியவகையில்உள்ளூர் விவசாயிகளை கரிம உரங்களின் பாவனையின் பால் ஊக்குவிப்பதற்காகஅமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 

இந்த கலந்துரையாடலின் போது, ​​கமத்தொழில் அமைச்சர் அவர்கள், விவசாயத்தின் முன்னேற்றத்திற்கும் மக்களின் ஆரோக்கியத்திற்கும் ஒரு சிறந்த முடிவை எடுத்தார்கள். ஆரோக்கியமான ஒரு தலைமுறையை உருவாக்குவதில் கவனம் செலுத்தி,குறிப்பாக நச்சு அல்லாத உணவு மூலம், கரிம உரங்களின் பாவனையை ஊக்குவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் அவர்கள் வலியுறுத்தினார்கள்.

 

இரசாயன உரங்களின் தகாத பாவனையினால் ஏற்படக் கூடிய சுகாதார பிரச்சினைகளையும் மற்றும் சுற்றாடல் பிரச்சினைகளையும்  குறைக்கும் நிமித்தம் பல நடவடிக்கைகளை எடுப்பதில் கவனம் செலுத்தப்பட்டது.

 

அதற்கிணங்க,

 

  • அரசாங்க உர கம்பனிகளின் கரிம உரங்கள் உற்பத்தித் திறனை அதிகரித்தல்.
  • கரிம உரங்களை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பத்தையும் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளையும் வழங்குதல்.
  • தனியார் கம்பனிகளுக்கு தேவையான வரி நிவாரணத்தை / நவீன உபகரணங்களை வழங்குதல்.
  • கரிம உரங்களின் உற்பத்திக்கு தேவையான நிலங்களை பெற்றுக் கொடுத்தல்.
  • கரிம உரங்களை உற்பத்தி செய்ய தேவையான மூலப்பொருட்களை அரசாங்கத்தின் தலையீட்டின் ஊடாக பெற்றுக் கொடுத்தல்.
  • கரிம உரங்களை விநியோகிக்கும் நிமித்தம் அரசாங்கத்தினது தலையீட்டின் ஊடாக முறையான ஒரு பொறிமுறையை நிறுவுதல்.

 

கௌரவ மஹிந்தானந்தா அலுத்கமகே அவர்கள் மேலும் கூறுகையில், அரசாங்க உர மானியத் திட்டத்தின் கீழ் கரிம உரங்களைப் பாவிக்கும் விவசாயிகளின் மானிய அளவை அதிகரிப்பதற்கான தேவையையும்  மற்றும்அவர்களின் தயாரிப்புகளை அதிக விலைக்கு வாங்குவதற்கான தேவையையும்  மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் கூறினார்கள்.

 

அதன்படி, இந்த திட்டம் ஜனவரி 2021 முதல் இயக்கப்படும், இதன் மூலம் உள்ளூர் கரிம உரங்களின் பயன்பாடு 03 ஆண்டுகளுக்குள் 30%வீதம்வரை அதிகரிக்கப்படும்.

 

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர், இராஜாங்க அமைச்சுகளின் செயலாளர்கள், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் கரிம உர கம்பனிகளின் பிரதிநிதிகள் ஆகிய பலரும் கலந்து கொண்டனர். 

 

AGRI NEWS 02   AGRI NEWS 03 

 AGRI NEWS 04   AGRI NEWS 05

சமூக வலையமைப்பு

     கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்