English (UK)SinhalaSriLankaTamilIndia


சொளபாக்கியத்தின் தூரநோக்கு எனும் கனவை நனவாக்கும் முதலாவது உற்பத்திக் கொத்தணிக் கிராமம் - நாவலப்பிட்டி

 NEWS 01.  NEWS 02.

சொபாக்கியத்தின் தூரநோக்கு எனும் கனவை நனவாக்கும் முதலாவது உற்பத்திக் கொத்தணிக் கிராமம் நாவலப்பிட்டியவில் ஆரம்பம்

 

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் சொளபாக்கிய தூநோக்குத் திட்டத்தின் பிரகாரம் இலங்கையை சுயதேவை பூர்த்தியுடைய ஒரு நாடாக கட்டியெழுப்பும் உன்னத நோக்கில் உள்நாட்டு விவசாயத்தை மேம்படுத்தி விவசாயிகளின் பொருளாதார நிலையை மேலும் வலுப்படுத்தும் முகமாக ஆரம்பிக்கப்படும் "உற்பத்திக் கொத்தணிக் கிராமங்கள்எனும் நிகழ்ச்சித் திட்டம் இன்று 2020.08.29ஆம் திகதி கமத்தொழில் அமைச்சர் கௌரவ மஹிந்தானந்த அவர்களின் தலைமையில் நாவலப்பிட்டிய அளுத்கம எனும் கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

 

இந்த வேலைத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கிராமத்திலும் விவசாய உற்பத்தி செயற்பாடுகளை, உயர்ந்த தொழில் நுட்ப முறையியல்களை பின்பற்றி அதிக விளைச்சலை பெறக் கூடிய உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக் கூடிய பயிர்களை பயிரிடும் வகையில், விதைகளை உற்பத்தி செய்து அந்த விதைகள் உள்நாட்டு சந்தைகளுக்கும்மற்றும்வெளிநாட்டு சந்தைகளுக்கும் விநியோகிக்கப்படவுள்ளன. இதன் முதலாம் கட்டமாக 500குடும்பங்களை இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் பங்குகொள்ள செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

 

இந்த செயற்பாட்டிற்கு தேவையான விதைகள், தொழில் நுட்ப அறிவு, நிதி சார்ந்த உதவிகள் என்பன அடங்கலாக ஒட்டுமொத்த செயற்பாட்டையும் கண்காணிப்பதற்கு தேவையான மனித வளங்கள் போன்ற அனைத்து வசதிகளும் அரசாங்காத்தினால் பெற்றுக் கொடுக்கப்படும். இதனால், கிராமிய விவசாயத்தில் பாரிய ஒரு அபிவிருத்தி ஏற்படும். விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும்அதே போல் நாட்டை விவசாய உற்பத்தியில் தன்னிறைவுடையதாக ஆக்கவும் இதன் மூலம் எதிர்பார்க்கப் படுகின்றது.

 

விவசாயப் பணிப்பாளர் நாயகம்மற்றும்விவசாய அமைச்சின் மேலதிக செயலாளர்கள், ஏற்றுமதிப் பயிர்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் அடங்கலாக அதிகளவான மக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வியாழக்கிழமை, 03 செப்டம்பர் 2020 10:36

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்