English (UK)SinhalaSriLankaTamilIndia


ஆரோக்கியமான சிறுவர் தலைமுறையை கட்டியெழுப்பும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு கோப்பை பாலுக்கு பதிலாக ஒரு கோப்பை ஆரோக்கியமான பாரம்பரிய அரிசிக் கஞ்சியை வழங்குதல்

NEWS 01.  NEWS 02.

27.08.2020 ஆம் திகதி (இன்று) கொவிஜன மந்திரய கட்டிடத்தில் கமத்தொழில் அமைச்சர் கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே அவர்களின் தலைமையில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் விஷேடமான ஒரு பேச்சுவார்த்தை இடம்பெற்றது. பாடசாலை மாணவர்களுக்கு ஒரு கோப்பை பாலுக்கு பதிலாக ஒரு கோப்பை பாரம்பரிய அரிசிக் கஞ்சியை வழங்குவது பற்றி இதன் போது கலந்துரையாடப்பட்டது.

 

நாட்டில் போதியளவு பால் உற்பத்தி இல்லாமை மற்றும் பாடசாலை  மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றுக்கு ஒரு தீர்வாக இந்த திட்டத்தை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்வைத்தது. இன்று, பாடசாலை மாணவர்களுக்கு மத்தியில் ஊட்டச்சத்து இன்மை மற்றும் அதிக ஊட்டச்சத்து போன்ற ஊட்டச்சத்து தொடர்பான பிரச்சினைகள் காணப்படுகின்றன. உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற தொற்றா நோய்களின் பாதிப்பு பாடசாலை மாணவர்களுக்கு இடையில் படிப்படியாக அதிகரித்து வருவதும் ஒரு பிரச்சினையாகும். இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வாக நச்சு அல்லாத பாரம்பரிய உள்ளூர் அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு கோப்பை கஞ்சியை வழங்குவது மிகவும் முக்கியமானது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) சுட்டிக்காட்டியது.  

 

கமத்தொழில் அமைச்சு இந்த முன்மொழிவை ஏற்றுக் கொண்டு, இந்தத் திட்டம் பற்றிய ஒரு சாத்தியவள ஆய்வை மேற்கொள்ளும் நிமித்தம் ஒரு குழுவை நியமித்தது.

 

கமத்தொழில் அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா, விவசாயத் திணைக்களத்தினதும் மற்றும் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தினதும் அதிகாரிகள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். 


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வெள்ளிக்கிழமை, 28 ஆகஸ்ட் 2020 08:10

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்