කෂකරම සහ වවල කරමනත අමත යශය 3

   



சமுதாய மைய விதை உற்பத்திக் கிராமிய நிகழ்ச்சித்திட்டம்

விவசாயிகளுக்கு உரிய கால நேரத்திற்கு தரமான விதைகளை விநியோகிக்கும் நோக்கில் சமுதாய மைய விதை உற்பத்தி நிகழ்ச்சித்திட்டம் என்றழைக்கப்படும் புதிய விதை உற்பத்தி நிகழ்ச்சித்திட்டத்தை இந்த கமத்தொழில் அசமச்சு செயற் படுத்தி வருகின்றது.  விவசாயத் திணைக்களத்தின் கிடைக்கக்கூடிய வரையறுக்கப் பட்ட வளங்களைப் பயன்படுத்தி இந்த நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப் பட்டுள்ளது. இந்த வளங்களைக் கொண்டு உள்நாட்டு ரீதியில் நாட்டிற்குத் தேவையான விதைகளின் இலக்கை அடைந்துகொள்ளுவதற்கும், அதே நேரம் வினைத்திறன் வாய்ந்த தரங்களிலான நடுகை மூலப்பொருட்களையும் தரமான விதைகளையும் வழங்குவதற்கும் சாத்தியம் கிட்டும். 

இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விதை உற்பத்திக் கிராமங்களைத் தாபிப்பதற்கு கமத்தொழில் அமைச்சுடன் இணைந்து கமநல சேவைகள், வனசீவராசிகள் அமைச்சு, சிறு ஏற்றுமதிப் பயிர்கள் ஊக்குவிப்பு அமைச்சு, மாகாண விவசாயத் திணைக்களங்கள், இணைந்த நிறுவனங்கள் மற்றும் உப பிரிவுகள் என்பன அவற்றின் கூட்டுமொத்தப் பங்களிப்பை நல்கி வருகின்றன. இந்த நோக்கத்தின் நிமித்தம் ஒரு குழுவாக விவசாயிகளை ஒழுங்கமைப்பதன் மூலம் ஒவ்வொரு பிரிவும் ஆகக்குறைந்தது ஒரு கிராமத்தையாவது தேர்ந்தெடுத்தல் வேண்டும். 

காலநிலைப் பொருத்தப்பாடு, தேவை முதலியன போன்ற காரணிகளைக் கருத்திற் கொண்டு, உற்பத்தி செய்யப்பட வேண்டிய விதையின் வகை தேர்ந்தெடுக்கப் படும். விதைகளை வழங்குதல், தேவையான அறிவுரைகளை விடுத்தல், இந்த நிகழ்ச்சித்திட்டத்தை மேற்பார்வை செய்தல் என்பன இந்த விதை உற்பத்திக் கிராமங்களைத் தாபிப்பதில் சம்பந்தப்படும் அந்தந்த நிறுவனங்களின் பொறுப்பு ஆகும். அதே நேரம் விதைச் சான்றுதல் விடயம் விவசாயத் திணைக்களத்தினால்

மேற்கொள்ளப்படும். உற்பத்தி, தேவைக்கு அதிகமான அளவில் காணப்பட்டால், அந்த உற்பத்திகள் ஏனைய விதை உற்பத்திக் கிராமங்களுக்குப் பரிமாறிக் கொள்ளப்படும் அல்லது தனியார் துறைகளுக்கு விற்பனை செய்யப்படும். அதற்கிணங்க, இந்த நிகழ்ச்சித்திட்டம் விவசாயிகளுக்கான நன்மை பயக்கக்கூடிய விவசாய நடவடிக்கையாகப் பயன்படும்.    

இந்த நோக்கத்தின் நிமித்தம் ஏற்கனவே 30 மில்லியன் ரூபாய் நிதி இந்த அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி சகல மாகாண விவசாயத் திணைக்களங்கள், இலங்கை ஹதபிம அதிகார சபை, தேசிய உணவு ஊக்குவிப்புச் சபை என்பவற்றுக்கு இடையில் பகிர்ந்தளிக்கப்படும். அதற்கிணங்க தாபிக்கப்பட இருக்கின்ற விதை உற்பத்திக் கிராமங்களின் எண்ணிக்கை 299 ஆகும். இது தவிர மேலும் 20 மில்லியன் ரூபாய் மேலதிக நிதி அத்தகைய 200 கிராமங்களைத் தாபிப்பதற்காக விவசாயத் திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  அதன்படி, இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தாபிக்கப்படவுள்ள மொத்த விதை உற்பத்திக் கிராமங்களின் எண்ணிக்கை 499 ஆகும்.

சமூக வலையமைப்பு

     கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்