කෂකරම සහ වවල කරමනත අමත යශය 3

   



நிலைபேறான நீர் முகாமைத்துவக் கருத்திட்டம்

நிலைபேறான விவசாய நீர் முகாமைத்துவக் கருத்திட்டம் (கட்டம் 2)

 

உலர்வலய விவசாயிகளுக்காக சூரிய ஒளியைப் பயன்படுத்தி, சொட்டு நீர்ப்பாசனத்துடன் சேர்த்து உரத்தை இடும் முறையை பிரபல்யப்படுத்துவதினூடாக, நீர் மற்றும் உரப் பாவனையை வினைத்திறனாக்கல், எரிபொருட் செலவு அகற்றப்படுவதன் காரணமாக பயன்பாட்டுப் பொருட்களுக்கான  செலவு குறைக்கப்படுதல், இதன் காரணமாக மரக்கறி மற்றும் உப உணவுப் பயிர்களின் உற்பத்தித் திறன் அதிகரித்தல் என்பன இக்கருத்திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும். சூழல் மாசடைவது தடுக்கப்படுவதால், இது சுற்றாடல் நேசம் கொண்ட விவசாயத் தொழில்நுட்பமாக விளங்குகின்றது.

 இக்கருத்திட்டத்தின் கட்டம் 2 இற்காக அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் தலையீட்டில் EFIC (Export Finance Insurance Corporation) நிறுவனமும், HSBC வங்கியும் இணைந்து, திருப்பிச் செலுத்தும் நீண்டகாலக் கடனாக 16.1 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்காக வழங்குகின்றன. அவுஸ்திரேலியாவின் BP சோலா (தனியார்) கம்பனி, இதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுத் தருவதுடன், இக்கம்பனியின் உள்ளூர் முகவராக சோலார் சொலூசன் (தனியார்) கம்பனி (பரேசயிட் இஞ்சினியரிங்  (தனியார்) கம்பனி) செயற்படுகின்றது.

முன்னேற்றம்

 இக்கருத்திட்டம் அநுராதபுரம், குருணாகல், மொனறாகலை, பொலநறுவை, மாத்தளை, புத்தளம், அம்பாறை, வவுனியா, பதுளை, மட்டக்களப்பு, திருகோணமலை, இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை, கண்டி ஆகிய மாவட்டங்களில் அமுல் செய்யப்படுவதுடன், 2009 மார்ச் மாதம் தொடக்கம் 2009 திசெம்பர் மாதம் வரை கடன் அடிப்படையில் நுண் நீர்பாசன மறைமைகள் விநியோகிக்கப்படவுள்ளன. இதுவரை கட்டம் I இன் கீழும்,   கட்டம் II  இன் கீழும் சுமார் 6,000 நுண் நீர்பாசன உபகரணத் தொகுதிகள் விவசாயிகளின் செய்கை நிலங்களில் பொருத்தப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்டத்தின் போது சமுர்த்தி வங்கியுடன் இணைந்து இந்த நுண் நீர்பாசன முறைமைகள் வழங்கப்படும். இங்கு, அடிப்படைத் தகைமைகளைப் பூர்த்தி செய்ததன் பின் சமுர்த்தி வங்கி அங்கத்துவம் உள்ள விவசாயிகளுக்கு ரூ.10,000/- ஆரம்ப வைப்பையும், சமுர்த்தி வங்கி அங்கத்துவம் இல்லாத விவசாயிகளுக்கு ரூ.25,000/- ஆரம்ப வைப்பும் வைப்புச் செய்ததன் பின் இந்த முறைமைகள் வழங்கப்படும். பின்னர் நுண் நீர்பாசன முறைமைகள் பொருத்தப்பட்டு 6 மாதங்கள் கடந்ததன் பின்னர் மாதாந்தம் ரூ.3,665/- வீதம் 120 தவணைகளில் செலுத்தி முடிக்கப்பட்டதன் பின்னர் இவற்றின் உரிமை விவசாயிகளுக்குப் பெற்றுக் கொடுக்கப்படும்.

சமூக வலையமைப்பு

     கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்